September 29, 2026
தேசியம்
செய்திகள்

தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைக்கும் Quebec முதல்வர்?

Quebec மாகாண முதல்வர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை முன்னெடுக்கிறார்.

தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் Québec முதல்வர் Christine Fréchette, அவசரமாக தனது அமைச்சரவைக் கூட்டுகிறார்.

திங்கட்கிழமை (07) இரவு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை (08) அமெரிக்கப் பொருட்களின் மீது கனடா விதிக்க இருக்கும் 15 முதல் 50 சதவீதம் வரையிலான வரிகள் குறித்து விவாதிக்க இந்த இணையவழி அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாகாண தேர்தல் பிரசாரத்தின் போது, பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் பிரசாரத்தை நிறுத்திவிட்டு அமைச்சரவையை கூட்டுவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் இந்த அவசரக் கூட்டத்தை கூட்டுவது அரசியல் ஆதாயத்திற்கான ஒரு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

வணிகங்களை இந்த வர்த்தகப் போருக்கு தயார் படுத்த இந்த அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டும் மாகாண Liberal கட்சித் தலைவர் Charles Milliard, தற்போதைய கூட்டம் வாக்காளர்களை கவர நடத்தப்படும் ஒரு “நாடகம்” என விமர்சித்துள்ளார்.

Donald Trump-பைக் காட்டி அச்சமூட்டும் உத்தியைப் பயன்படுத்தி, தனது தோல்விகளை மறைக்க முதல்வர் முயல்வதாக, Parti Québécois தலைவர் Paul St-Pierre Plamondon குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய நிலையில் மாகாண பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் பிரசாரத்தை விட மிக முக்கியமானது என முதல்வர் (Christine Fréchette தரப்பு விளக்கியுள்ளது.

Quebec மாகாணத் தேர்தல் October 5-ஆம் திகதி நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை

Lankathas Pathmanathan

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது

Lankathas Pathmanathan

Leave a Comment