தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை

British Colombia மாகாண Richmond மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Richmond மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Wilson Miaoக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த குற்றசாட்டை Peter Liu எதிர்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் Facebook video வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட Peter Liuக்கு இரண்டு மாத வீட்டுக்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயதான Peter Liu தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதையடுத்து, புதன்கிழமை (26) அவருக்கு 60 நாள் நிபந்தனை தண்டனையை நீதிபதி Diana Vandor வழங்கினார்.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கு நேரடியான அச்சுறுத்தலாகவும் பொதுவாக, ஜனநாயகத்திற்கே ஒரு அச்சுறுத்தலாகவும் இந்த மிரட்டல் அமைந்திருந்தது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
முன்னாள் Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து 2021 தேர்தலில் Richmond மத்திய தொகுதியை 772 வாக்குகளால் Wilson Miao வெற்றி பெற்றார்.
இவரும் மற்றொரு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சீனா சார்பு ஆர்வலர்களின் செல்வாக்கால் பயனடைந்ததாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்
இந்த குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தண்டனை விதிக்கப்பட்ட Peter Liu  சீனாவில் பிறந்து, சிறு வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்.

இவர் ஐந்து வருடங்கள் கனடிய ஆயுதப் படைகளின் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத குழுவொன்றின் கொடியை ஏந்திச் சென்ற நபர் கைது

Lankathas Pathmanathan

Trudeau அரசாங்கம் இன்று வீழ்ச்சியடையலாம்

Lankathas Pathmanathan

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

Gaya Raja

Leave a Comment