September 13, 2026
தேசியம்
செய்திகள்

மீண்டும் நாடாளுமன்றம் திரும்பும் Pierre Poilievre!

Alberta மாகாண இடைத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre வெற்றியடைந்தார்.

Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

இந்தத் தேர்தலிவ் வெற்றியடைந்த Pierre Poilievre, Alberta மாகாணத்தின் Conservative நாடாளுமன்ற உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக Ottawa திரும்புகிறார்.

September 15-ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது, Pierre Poilievre அதில் கலந்து கொள்வார்.

இந்த இடைத் தேர்தலில் 214 வேட்பாளர்கள் பதிவு செய்திருந்தனர்.

இது கனடிய வரலாற்றில் ஒரு பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்தது.

இந்தத் தொகுதியில் Pierre Poilievre தவிர Liberal வேட்பாளர் Darcy Spady, NDP வேட்பாளர் Katherine Swampy, People’s Party வேட்பாளர் Jonathan Bridges, பசுமை கட்சி வேட்பாளர் Ashley MacDonald ஆகியோரும் போட்டியிட்டனர்.

இந்த இடைத்தேர்தலில் வெற்றியடைந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள Conservative கட்சி மாநாட்டில் தலைமைத்துவ மதிப்பாய்வை Pierre Poilievre எதிர்கொள்ள உள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் Pierre Poilievre தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் Battle River-Crowfoot தொகுதிக்கான Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek தனது பதவியில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனானில் இருந்து கனடியர்களை வெளியேற்ற உதவும் நிலையில் படையினர்?

Lankathas Pathmanathan

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

மேலும் மூன்று பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Winnipeg நபர்

Lankathas Pathmanathan

Leave a Comment