September 19, 2026
தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு தமிழர் போட்டி

Toronto நகர முதல்வர் பதவிக்கு தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார்.

நகர முதல்வர் பதவிக்கு கண்ணன் ஸ்ரீ JR போட்டியிட உள்ளார்.

நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் May மாதம் முதலாம் திகதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது.

பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.

இதில் Toronto நகர முதல்வர் பதவிக்கு கண்ணன் ஸ்ரீ JR என்ற வழக்கறிஞர் போட்டியிடுகிறார்.

வெள்ளிக்கிழமை (29) அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நகர முதல்வர் பதவிக்கு தற்போதைய நகர முதல்வர் Olivia Chow, நகர சபை உறுப்பினர் Brad Bradford உட்பட இதுவரை மொத்தம் 20 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் August 21 -ஆம் திகதி மாலை 2 மணியுடன் நிறைவடைகிறது.

Related posts

கொலை குற்றச்சாட்டு சந்தேக நபரான தமிழர் கைது

Lankathas Pathmanathan

கனேடிய வங்கி முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவில்லை!

Gaya Raja

Torontoவில் வாகனம் மோதியதில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment