September 6, 2026
தேசியம்
செய்திகள்

2030 வரை இனி Snowbirds விமான சாகசங்களைக் காண முடியாது?

Toronto வான்பரப்பில் கனடியப் படைகளின் Snowbirds விமானக் குழுவினர் தங்களது புகழ்பெற்ற வான் சாகசங்களை வார விடுமுறை முழுவதும் நிகழ்த்துகின்றனர்.

77-வது வருடாந்த கனடிய சர்வதேச விமானக் கண்காட்சியில் ஒரு பகுதியாக, கனடியப் படைகளின் Snowbirds குழுவினர் இந்த வார இறுதியில் Toronto-வில் தங்கள் சாகச நிகழ்ச்சியை நிகழ்த்துகின்றனர்.

கனடியப் படைகளின் Snowbirds விமானக் குழுவினர் கனடிய தேசிய கண்காட்சியின் (CNE) ஒரு முக்கிய அங்கமாக வான் சாகச நிகழ்ச்சியை நிகழ்த்துகின்றனர்.

Labour தின வார இறுதியில் நடைபெறும் கனடிய சர்வதேச விமானக் கண்காட்சியில், ஆண்டுதோறும் முதன்மை நிகழ்ச்சியாக Snowbirds விமானக் குழுவினர் பங்கேற்கின்றனர்.

2030-ஆம் ஆண்டு வரை Toronto நகரில் நடைபெறும் கனடியப் படைகளின் Snowbirds விமானக் குழுவினரின் இறுதி வான் சாகசக் காட்சி இதுவாகும்.

Snowbirds குழுவினர் 1971-ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வரும் பாரம்பரிய CT-114 Tutor jet விமானங்கள் இந்த ஆண்டின் இறுதியில் முழுமையாக ஓய்வு பெறுகின்றன.

இவற்றுக்குப் பதிலாக புதிய CT-157 Siskin II ரக அதிநவீன விமானங்கள் இணைக்கப்படவுள்ளன.

பழைய விமானங்கள் மாற்றப்பட்டு புதிய விமானங்கள் செயல்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால், 2030-களின் ஆரம்பம் வரை Snowbirds  குழுவினரால் Toronto-வில் சாகசங்களை நிகழ்த்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவின் வரலாற்றின் இறுதி வான் சாகசக் காட்சி எதிர்வரும் November 15 அன்று Calgary நகரில் நடைபெற உள்ள புகழ்பெற்ற Grey Cup போட்டியின் போது நிகழ்த்தப்படவுள்ளது.

Related posts

Scarborough Centre தொகுதியில் மாகாணசபை தேர்தல் வேட்பாளராகும் நீதன் சான்!

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory

Lankathas Pathmanathan

Leave a Comment