September 25, 2026
தேசியம்
செய்திகள்

அமைச்சரவை கூட்டத்திற்கு முன் பரபரப்பு: முன்னேற்ற அறிக்கை கோரும் பிரதமர்!

வளர்ச்சிப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

அடுத்த வாரம் முக்கிய அமைச்சரவை மாநாடு நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் வளர்ச்சிப் பணிகள், முக்கிய கோப்புகள் குறித்த தற்போதைய முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் Mark Carney உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெயர் வெளியிடப்படாத அரச தரப்பு வட்டாரங்கள் மூலம் இந்தத் தகவல் வெளியானது.

அமைச்சரவை மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள இலக்குகள், அடைந்த முன்னேற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரம், பொருளாதார மந்தநிலை, உள்நாட்டு வேலைவாய்ப்பு சரிவு போன்ற முக்கிய சவால்கள் நீடித்து வரும் நிலையில், மத்திய அரசு தனது செயல்பாடுகளை விரைவுபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த அமைச்சரவை மாநாட்டில் நாட்டின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள், வர்த்தகப் போரை எதிர்கொள்வதற்கான உத்திகள், பொதுமக்கள் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளின் பங்கேற்பை எதிர்த்து கனடிய துணைப் பிரதமர் வெளிநடப்பு

Lankathas Pathmanathan

கனடாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பிரஜைகள் எண்ணிக்கையில் சிறிய அரிகரிப்பு!

Gaya Raja

Alberta இறையாண்மை சட்டம் குறித்து அவதானித்து வருகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment