September 29, 2026
தேசியம்
செய்திகள்

600,000 பேரை இணைக்கும் வகையில் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களைச் சேர்க்க முயற்சி?

600,000 பேரை இணைக்கும் வகையில், மேலதிக முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களைச் சேர்க்க Ontario அரசாங்கம் முயற்சிக்கிறது.

இதற்கான திட்ட முன்மொழிவுக்கான அழைப்பை மாகாண அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது.

Ontario மாகாண சுகாதார அமைச்சர் Sylvia Jones செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

2029-ஆம் ஆண்டிற்குள் Ontario மாகாண மக்கள் அனைவரையும் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புடன் இணைக்கும் இலக்கை நோக்கிச் மாகாணம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 78 முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களை உருவாக்க அல்லது விரிவுபடுத்தும் வகையிலான திட்ட முன்மொழிவுக்கான அழைப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் அரசின் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 4,37,000 பேர் முதன்மை மருத்துவச் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Sylvia Jones கூறினார்.

அடுத்த கட்டம் மேலும் 600,000 பேரை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Ontario-வில் உள்ள அனைவருக்கும் முதன்மை மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்கான அமைச்சரின் அர்ப்பணிப்பானது, இரண்டு இலட்சம் மக்களை இணைப்பதை உள்ளடக்கியுள்ளது.

ஆனால், 2.5 இலட்சம் பேருக்குக் குடும்ப மருத்துவர் இல்லை என Ontario மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் தனது இலக்கை அடைவதற்கான பாதையில் இருப்பதாக Sylvia Jones கூறுகிறார்.

Related posts

மெக்சிகோ சென்றடைந்தார் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்

Lankathas Pathmanathan

சிறுவர்களை பாலியல் ரீதியாக மிரட்டுவதற்காக இணையத்தில் பதின்ம வயது சிறுவன் போல் நடித்தவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment