தேசியம்
Uncategorized

மத்திய கிழக்கிற்கான Air கனடா விமான சேவைகள் மீண்டும் தாமதம்?

Air கனடா விமான நிறுவனத்தின் மத்திய கிழக்கிற்கான சில விமான சேவைகள் மீண்டும் தாமதமாகிறது.

நிச்சயமற்ற நிலை காரணமாக இந்த தாமதங்கள் அறிவிக்கப்படுகிறது.

Dubai,Tel Aviv நகரங்களுக்கு செல்லும் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை Air கனடா நிறுவனம் 2027-ஆம் ஆண்டு January மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

Air கனடா தனது குளிர் கால அட்டவணையின் ஒரு பகுதியாக Dubai சேவையை மீண்டும் ஆரம்பமாகும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் Dubai சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகள் January மாதத்தின் நடுப்பகுதி வரை மீண்டும் ஆரம்பிக்காது என Air கனடா தற்போது அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், Tel Aviv நகரத்திற்கான தனது சேவையையும் மீண்டும் அதே நேரத்தில் ஆரம்பிக்க Air கனடா முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் Israel-லுக்கான விமானச் சேவைகளின் தடை நீடிக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமானப் பயணத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

February 28 அன்று மத்திய கிழக்கில் பதற்ற  நிலை ஆரம்பித்த பின்னணியில், Air கனடா அந்த இரண்டு இடங்களுக்குமான விமான சேவைகளையும் முதலில் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் Toronto காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

2024 வரவு செலவுத் திட்டம்: துண்டு விழும் தொகை $39.8 பில்லியன்!

Lankathas Pathmanathan

Leave a Comment