September 27, 2026
தேசியம்
செய்திகள்

Brampton நகர துப்பாக்கிச் சூடு குறித்து இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கடந்த மாதம் Brampton நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, 24 வயது இளைஞர் மீது Peel பிராந்திய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதில் Scarborough நகரைச் சேர்ந்த 24 வயதான பகிராம் பாலகுமார் மீது காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளையில், மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

June 4 அன்று Sandalwood Parkway and Crown Victoria Drive பகுதிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த அழைப்பின் பேரில் அதிகாரிகள் சென்றனர்.

அங்கு அதிகாரிகள் “பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால்” பாதிக்கப்பட்டிருந்த ஒருவரைக் கண்டுபிடித்தனர்.

பாதிக்கப்பட்டவர் 25 வயதான Jamal Edward என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் காவல்துறையினர் முன்னெடுத்த முழுமையான  விசாரணையை தொடர்ந்து,  பகிராம் பாலகுமார் July 21 அன்று கைது செய்யப்பட்டு, அவர் மீது முதல் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டது.

பிணை விசாரணைக்காக அவர் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை  நிரூபிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் காணொளியில் பதிவாகியிருப்பதாகவும், அவர்கள் இதுவரை கைது
செய்யப்படவில்லை எனவும் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்கள் உதவியையோ அல்லது தகவலையோ எதிர்பார்க்கிறது.

அவர்கள் இருவரும் ஆயுதம் ஏந்திய ஆபத்தானவர்கள் எனக் கருதப்பட வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Related posts

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja

முதல் காலாண்டில் கனேடியப் பொருளாதாரம் 3.1 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan

ஊழல் விசாரணையில் ஏழு Toronto காவல்துறை அதிகாரிகள் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment