தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்தின் காணிக்கான குத்தகை காலத்தை நீட்டிக்க நகரசபை இணக்கம்

தமிழ்ச் சமூக மையத்தின் காணிக்கான குத்தகை காலத்தை 50 ஆண்டுகளாக நீட்டிக்க Toronto நகரசபை இணங்கியுள்ளது.

Toronto நகர முதல்வர் Olivia Chow வெள்ளிக்கிழமை (24) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

தமிழர் சமூகத்தின் கனவுத் திட்டமான தமிழ்ச் சமூக மையம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இரண்டு வெள்ளியன்று வெளியானது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய Oliva Chow, Toronto நகரத்திற்கு தமிழர் சமூகம் ஆற்றிய பங்களிப்புக்களை அங்கீகரிக்க பயன்படும் ஒரு இடமாக தமிழ்ச் சமூக மையம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்கு உதவுவதற்காக புதிய நடவடிக்கைகளை Olivia Chow அறிவித்தார்.

சமூக மையத்திற்கான குத்தகை காலத்தை 30 ஆண்டுகளில் இருந்து 50 ஆண்டுகளாக நீட்டிப்பதாக Olivia Chow அறிவித்தார்.

தமிழ்ச் சமூக மைய திட்டத்திற்கான Toronto நகரின் தொடர்ச்சியான ஆதரவின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக இந்த அறிவித்தல் வெளியானது.

இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள Toronto நகர சபை கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ள ஒரு முன்மொழிவு மூலம் இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த உதவும் இரண்டு முக்கிய புதிய நடவடிக்கைகளை நகர முதல்வர் அறிவித்தார்.

நகர முதல்வர் Olivia Chow தவிர, மத்திய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி,  Ontario மாகாண இணை அமைச்சர் விஜய் தணிகாசலம், Toronto நகரசபை உறுப்பினர் நீதன் சான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

குத்தகை காலத்தை 50 ஆண்டுகளாக நீட்டிப்பது தவிர, $60 ஆயிரம்  மதிப்பிலான தளம் சார்ந்த திட்ட அனுமதி (Site Plan Approval) கட்டணங்களை இரத்து செய்வது தொடர்பான பிரேரணையும் அறிவிக்கப்பட்டது.

இது ஆண்டின் பிற்பகுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள தமிழ்ச் சமூக மையத்தின் தளத் திட்ட ஒப்புதல் விண்ணப்ப  கட்டணங்களை விலக்களிப்பதற்கு நகரசபையின் ஒப்புதலை முதல்வரின் இந்த பிரேரணை கோரவுள்ளது.

மூன்று மட்ட அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி விடுத்த இந்த அறிவித்தலில் ஊடாக் தமிழ்ச் சமூக மையம் தனது கட்டுமான திட்டமிடலில் மற்றொரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளதாக தமிழ்ச் சமூக மையத்தின் இயக்குனர் சபை வெளியிட்ட ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடல் ஒப்புதல் நடைமுறைகள், இறுதி தளத்திட்ட ஒப்புதல் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானம் ஆனாப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்ச் சமூக மைய திட்டத்தில் இரண்டு பிரதான அங்கீகாரங்களும் இந்த மாத ஆரம்பத்தில் கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto அமெரிக்க துணைத் தூதரகம் மீது மீண்டும் துப்பாக்கி பிரயோகம்?

Lankathas Pathmanathan

17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!

Gaya Raja

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்!

Lankathas Pathmanathan

Leave a Comment