தேசியம்
செய்திகள்

FIFA: அடுத்த சுற்றில் Morocco அணியை எதிர்கொள்ளும் கனடா

FIFA 2026 உலகக் கோப்பை தொடரின் round of 16 ஆட்டத்தில் கனடா Morocco அணியை எதிர்கொள்கிறது.

ஞாயிற்றுக்கிழமை (28) அமெரிக்காவின் Los Angeles நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த கனடா, உலகக் கோப்பை தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

திங்கட்கிழமை (29) Netherlands அணியை தோற்கடித்த Morocco அணி, அடுத்த சுற்றில் கனடாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்த ஆட்டம் July 4 அன்று Houston நகரில் நடைபெற உள்ளது.

கனடா, Morocco அணிகளுக்கு இடையிலான இரண்டாவது உலகத் தொடர் போட்டியாக இது அமைகிறது.

உலகத் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருந்து இந்தத் தொடரில் களமிறங்கிய Morocco அணி, 2022-ஆம் ஆண்டு உலகத் தொடர் போட்டியில் தமது இறுதி குழு ஆட்டத்தில் கனடாவை 2-1 என்ற goal கணக்கில் வீழ்த்தி, பின்னர் அரையிறுதி வரை முன்னேறியது.

கனடா உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் இந்த உலகத் தொடரில் களம் இறங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Torontoவில் தமிழர்களின் திரையரங்கில் தீ?

Lankathas Pathmanathan

இதுவரை 21 COVID துணை மாறுபாடு தொற்றாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் ஐந்தாவது தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment