தேசியம்
செய்திகள்

இரண்டு குழந்தைகள் – தந்தை சடலமாக மீட்பு

Ottawa-வில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலை-தற்கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Ottawa இல்லத்தில் 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

இது ஒரு கொலை-தற்கொலை சம்பவம் என தெரியவருகிறது.

இரு குழந்தைகளும், அவர்களது தந்தையும் இரட்டைப் படுகொலை,  தற்கொலைச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என Ottawa காவல்துறையினர் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (29) தெற்கு Ottawa-வில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சிறுவர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது கொலை, தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் Ottawa காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு Ontario-வில் ஒரு வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர்களின் தந்தை சில மணிநேரங்களுக்கு முன்பே இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பலியான குழந்தைகள் 7, 12 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர் விவாகரத்து செய்திருந்தனர் எனவும் கூறப்படுகிறது.

பலியான இருவரும் சகோதரர்கள் எனவும் அவர்களின் உடல்கள் தந்தையின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

வேறொரு இடத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாகனத்திற்குள் தந்தையின் உடல் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாகவும் காவல்துறையினர் கூறினர்.

Related posts

முன்னாள் அமைச்சர் Francis Fox மரணம்

Lankathas Pathmanathan

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Gaya Raja

Leave a Comment