தேசியம்
செய்திகள்

Ontarioவில் Delta மாறுபாடு தொற்றின் ஆதிக்க வடிவமாக கோடையில் மாறும்!

எதிர்வரும் கோடை காலத்தில் delta மாறுபாடு தொற்றின் ஆதிக்க வடிவமாக மாறும் என Ontarioவின் புதிய modelling அறிக்கை கூறுகிறது.

ஆனாலும் இதன் மூலம் நான்காவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என வியாழக்கிழமை வெளியான modelling தரவுகள் அறிவுறுத்துகின்றன. இந்த நிலையில் delta மாறுபாடு பரவி வரும் Ontarioவின் ஏழு பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் வழங்க மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இவர்கள் இரண்டாவது தடுப்பூசியை திட்டமிட்டதைவிட முன்னர் பெற முடியும் என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை முதல் Delta மாறுபாட்டின் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களில் April 19 முதல் May 9 வரையான காலத்தில் தமது முதலாவது mRNA தடுப்பூசியின் முதல் தடுப்பூசியை பெற்றவர்கள்  இரண்டாவது தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம். 

Ontarioவின் பெரும்பகுதி முழுவதும் COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. Ontarioவில் வியாழக்கிழமை 590 புதிய தொற்றுக்களும் 11 மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

Related posts

தடுப்பூசி பெறாத செவிலியர்களை பணியமர்த்துவதுமா Ontario?

Lankathas Pathmanathan

ரஷ்யாவுடன் நீண்ட கால அமைதிக்கு உதவுமாறு உக்ரேன் கனடாவுக்கு அழைப்பு

Lankathas Pathmanathan

COVID தொற்று Ontarioவில் மீண்டும் பரவ ஆரம்பிக்கும் அறிகுறிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!