தேசியம்
செய்திகள்

மீண்டும் சர்ச்சைக்குள் ஹரி ஆனந்தசங்கரி?

Liberal அரசாங்கத்தின் துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பினார்.

Quebec மாகாணத்தில் இருந்து எழும் அழுத்தத்தால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்த உள்ளூர் காவல்துறைக்கு வளங்கள் இருக்குமா என்பது குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

துப்பாக்கிதாரி ஒருவர் அமைச்சருடன் நடந்த உரையாடலை பதிவு செய்து வெளியிட்ட நிலையில் இந்தத் தகவல் வெளியானது.

அமைச்சருக்கு சொந்தமான Toronto குடியிருப்பில் வசிக்கும்  குத்தகைதாரருக்கும் அமைச்சருக்கும் இடையிலான சுமார் 20 நிமிடங்கள் நடந்த உரையாடலில் வெளியான தகவலில் இந்தத் தகவலும் வெளியானது.

ஆனாலும் இந்த உரையாடலின் போது தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை அறிந்திருக்கவில்லை என கூறிய ஹரி ஆனந்தசங்கரி, தான் “தவறான” கருத்துக்களை தெரிவித்ததாக கூறினார்.

Related posts

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan

Ontario, Quebec, Saskatchewan, Manitoba மாகாணங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan

Tumbler Ridge அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சித் தலைவர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment