September 2, 2026
தேசியம்
செய்திகள்

Billy Bishop விமான நிலையம் குறித்த பிரதமரின் நிலைப்பாடு என்ன?

Toronto Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்துவது தொடர்பான Ontario அரசாங்கத்தின் திட்டம் குறித்து இறுதியான முடிவுக்கு வரவில்லை என என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

இந்த முன்மொழிவு குறித்து விரைவில் விரிவான கலந்தாய்வுகள் ஆரம்பிக்கும் என அவர் வியாழக்கிழமை (04) உறுதியளித்தார்.

Jet விமானங்கள் பாவனைக்கு ஏதுவாக Toronto Billy Bishop விமான நிலையத்தை விரிவுபடுத்த முதல்வர் Doug Ford விருப்பம் தெரிவித்தார்.

இதை மத்திய அரசாங்கம் அங்கீகரித்த ஒரு யோசனை எனவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த விடயத்தில் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என Mark Carney வியாழனன்று கூறினார்.

போக்குவரத்து சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் எனப் பல பிரச்சினைகள் உள்ளன என கூறிய பிரதமர் குடியிருப்புப் பகுதிகள், வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் கவலைகள் அல்லது பிரச்சினைகள், பூங்காக்கள், பிற அம்சங்கள் தொடர்பான பிரச்சினைகளும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்தத் தகவல்களை சேகரித்த பின்னர் அரசாங்கம் இதில் ஒரு முடிவெடுக்கும் எனவும் Mark Carney தெரிவித்தார்.

இதில் முழுமையான செயல்முறைகள் இதுவைர முடியாத காரணத்தால் விமான நிலையம் குறித்து தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் உருவாக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக பிரதமர் கூறினார்.

போக்குவரத்து அமைச்சர் Steven MacKinnon, ஏனைய பல Toronto Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலவே, பகிரங்கமாக உறுதியான கருத்து எதையும் இந்த விடயத்தில் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையத்தை நிர்வகிக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் Toronto நகரத்தின் இடத்தைப் பிடித்துக் கொள்வதற்கு சட்டமூலத்தை Doug Ford Progressive அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றியது.

இந்த ஒப்பந்தம் தற்போது மாகாணம், மத்திய அரசாங்கம், ஒரு மத்திய அமைப்பான Toronto துறைமுக ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே உள்ளது.

இந்த நடவடிக்கையை எந்தவித ஆலோசனையின்றி செய்யப்படும் நில அபகரிப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என Toronto நகர முதல்வர் Olivia Chow கூறியுள்ளார்.

Related posts

New Brunswick மாகாணத்தில் புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்

Gaya Raja

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் போன்ற தொனியிலான பிரதமரின் உரையுடன் முடிவடைந்தது Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு

Gaya Raja

Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment