தேசியம்
செய்திகள்

$3.5 மில்லியன் மதிப்புள்ள போலிக் கால்பந்து சீருடைகள் பறிமுதல்

$3.5 மில்லியன் மதிப்புள்ள போலிக் கால்பந்து சீருடைகளை Toronto காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான போலிக் கால்பந்து சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறை திங்கட்கிழமை (01) அறிவித்துள்ளது.

இதன் மூலம் $3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

Mississauga நகரில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் இருப்பதாக May 12 அன்று தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு பின்னர் காவல்துறை அங்கு ஒரு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தது.

அங்கு FIFA, Nike, Adidas ,Puma முத்திரைகள் பொறிக்கப்பட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  போலிக் கால்பந்து சீருடைகள், கொடிகள் , இரண்டு போலி FIFA உலகக் கிண்ணக் கோப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் Milton நகரை சேர்ந்த 41 வயதான Ramy Jaber, Mississauga நகரை சேர்ந்த 62 வயதான Walid Sarhan ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

Lankathas Pathmanathan

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan

தைவான் நிலநடுக்கத்தில் கனடியர் ஒருவரை காணவில்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment