தேசியம்
செய்திகள்

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

கனடா அடுத்த வாரம் Pfizer தடுப்பூசிகள் எதனையும் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்) கனடிய மத்திய அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டது. இந்த வார விநியோகத்திலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவற்றில் 82 சதவீத தடுப்பூசிகள் மாத்திரமே கனடாவை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் அடுத்த இரண்டு வாரங்களில் திட்டமிடப்பட்ட 417,000க்கும் அதிகமான தடுப்பூசிகளுக்கு பதிலாக 171,000 தடுப்பூசிகளை கனடா பெற உள்ளது.

Pfizerரிடமிருந்து எதிர்கால விநியோக அட்டவணைக்கு கனடா காத்திருப்பதாக கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். கனடாவின் அடுத்த மாதத்திற்கான Pfizer தடுப்பூசி ஏற்றுமதி பாதியாகக் குறைக்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவிடம் கோரிக்கை

இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திடம் Ontario முதல்வர் COVID தடுப்பூசிக்கான உதவியை கோரியுள்ளார். கனடாவில் தடுப்பூசிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையின் மத்தியில் இந்த கோரிக்கையை முதல்வர் Doug Ford இன்று முன்வைத்தார்.

அதிகமான Pfizer தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பதவி ஏற்கவுள்ள Joe Bidenனிடம் இந்த கோரிக்கையை Ford முன்வைத்தார். அடுத்த வாரம் கனடா Pfizer தடுப்பூசிகள் எதனையும் பெறாது என இன்று கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் Ontario முதல்வரின் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. Ontario அமெரிக்காவுடன் மிக நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதல்வர் Ford, Ontario மாகாணம் மட்டுமே அமெரிக்காவுடனான உலகின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.

Related posts

பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

இந்த வாரம் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

Omicron மாறுபாடு குறித்து அவசரமாக கூடிய G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment