தேசியம்
செய்திகள்

நாளை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்

நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வில் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்தும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த மெய்நிகர் கொண்டாட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் மாலை 7 மணிமுதல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதற்கு முன்னதாக தமிழ் கனடியர்களின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தமிழ் முன்கள பணியாளர்களுடனான ஒரு மெய்நிகர் நிகழ்வில் பிரதமர் Trudeau பங்கேற்பார். இந்த நிகழ்விலும் அமைச்சர் அனிதா ஆனந்த், நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி ஆகியோர் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

Quebecகில் 11 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 8ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment