தேசியம்
செய்திகள்

Derek Sloan கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? – நாளை வாக்களிப்பு

Hastings – Lennox and Addington தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Derek Sloanனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (புதன்) காலை வாக்களிக்க உள்ளனர்.

Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole இந்த நகர்வை முன்னெடுத்துள்ளார். கட்சியை தலைமை தாங்கும் முயற்சியில் ஒரு வெள்ளையின மேலாண்மைவாதியிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டதற்காக Derek Sloan மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.121 Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருபத்தைந்துக்கும் அதிகமானவர்கள் Derek Sloanனின் உறுப்பினர் நிலையை மறு ஆய்வு செய்யக் கோரி ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிலையில் Derek Sloanனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்த இரகசிய வாக்களிப்பு நாளை காலை 11 மணிக்கு நடைபெறும். இந்த நிலையில் தன்னைக் கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிக்கு எதிராக போராட திட்டமிட்டுள்ளதாக Derek Sloan கூறினார்.

Related posts

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கைது!

Lankathas Pathmanathan

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja

COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,536

Leave a Comment

error: Alert: Content is protected !!