தேசியம்
செய்திகள்

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுமாறு Quebec முதல்வர் கனடிய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார்.

தொற்றின் பரவலால் சுகாதார நெருக்கடி நாட்டில் அதிகரித்து வருவதால், அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களை தடை செய்யுமாறு François Legault மத்திய அரசை வலியுறுத்துகிறார். தொற்றினால் பாதிக்கப்படுபவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் Quebec மாகாணத்தில் அதிகரித்துவரும் நிலையில் வெளிநாடுகளில் விடுமுறையில் இருந்து திரும்புபவர்கள் குறித்து கவலையடைவதாக அவர் கூறினார்.

பிரதமர் Trudeauவிடமும் மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை நேரடியாக விடுவதாக இன்று (செவ்வாய்)நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Legault கூறினார்.

Related posts

2021 தேர்தலில் குறுக்கீடு முயற்சிகள் தேர்தல் முடிவை சமரசம் செய்யவில்லை

Lankathas Pathmanathan

FIFA தரவரிசையில் 40வது இடத்திற்கு கனடிய அணி முன்னேற்றம்

Lankathas Pathmanathan

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment