தேசியம்
செய்திகள்

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும்: பிரதமர் Trudeau

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

ஆனாலும் கனேடியர்கள் எப்போது வெளிநாட்டு பயணங்களுக்கான COVID தடுப்பூசி நிலையின் முறையான ஆதாரமான கடவுச்சீட்டுகளை எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு பதிலளிப்பதை பிரதமர் தவிர்த்தார். சர்வதேச பயணத்திற்கான ஆவண கட்டமைப்பிற்கு Ottawa பொறுப்பேற்கும் என கூறிய Trudeau, உள்நாட்டில் ஒரு திட்டத்தை கொண்டு வருவது மாகாணங்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

ஏனைய நாடுகள் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை விரைவாக உருவாக்கிவரும் நிலையில் கனடாவுக்கான முறையான ஆவணமொன்றை உருவாக்க அரசாங்கம் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இது போன்ற ஒரு ஆவணம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு பதலளிப்பதற்கு பிரதமர் Trudeau மறுத்து விட்டார்.

Related posts

B.C. வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு முறை எரிபொருள் தள்ளுபடி

Lankathas Pathmanathan

70 மில்லியன் டொலர் Lotto Max அதிஸ்டலாப சீட்டு Quebecகில் விற்பனை

Lankathas Pathmanathan

NORAD நவீனமயமாக்கலில் கனடா முதலீடு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!