February 16, 2025
தேசியம்
செய்திகள்

நைஜீரியாவில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலிய தீ விபத்தில் உயிர் இழப்புகள்

நைஜீரியாவில் உள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள கனடாவின் உயர்ஸ்தானிகராலயத்தில் திங்கட்கிழமை (06) இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த  தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தலைநகரில் உள்ள தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதில் எத்தனை பேர் இறந்தனர் அல்லது காயம் அடைந்தனர், எப்போது தீ விபத்து ஏற்பட்டது என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு கருத்து தெரிவிக்கவில்லை.

August 2022 நிலவரப்படி, அபுஜாவில் 12 கனேடிய தூதர்களும் உள்நாட்டில் பணியமர்த்தப்பட்ட 32 ஊழியர்களும் பணியில் இருந்தனர்.

Related posts

September மாதம் பாடசாலைக்கு திரும்புவதற்கு Ontario தயாராக இருக்கும்!!

Gaya Raja

COVID தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் ஆரம்பிக்கின்றன

Lankathas Pathmanathan

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment