தேசியம்
செய்திகள்

கனேடிய எல்லைத் தொழிலாளர்கள் August 6 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்!

கனேடிய எல்லைத் தொழிலாளர்கள் August 6 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறுகிறது.

கனடாவின் பொது சேவை கூட்டணி மற்றும் அதன் சுங்க மற்றும் குடிவரவு ஒன்றியம் அதன் உறுப்பினர்கள் August 6ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என கூறுகிறது.

இதனால் மத்திய அரசின் மீண்டும் எல்லைகளை திறக்கும் திட்டங்கள் பாதிக்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடியர்களும் அமெரிக்காவின் எல்லையில் இடையூறு களை எதிர்கொள்ளக்கூடிய நிலையும் தோன்றியுள்ளது.

முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்ப டாமல் கனடாவுக்கு நுழைவதற்கு August 9 முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

4 மாகாணங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற ஆரம்பித்தனர்

Gaya Raja

காய்ச்சல் பருவத்தின் உச்சத்தை கனடா எட்டியுள்ளது

Lankathas Pathmanathan

மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்து பேச மறுக்கும் காவல்துறையினர்?

Lankathas Pathmanathan

Leave a Comment