தேசியம்
செய்திகள்

4 மாகாணங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற ஆரம்பித்தனர்

கனடாவில் நான்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை முதல்  40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற  ஆரம்பித்துள்ளனர்.

Ontario, Alberta, Manitoba, British Columbia  ஆகிய மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை முதல்  40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  AstraZeneca தடுப்பூசியை பெறுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இந்த நான்கு மாகாணங்களிலும் AstraZeneca தடுப்பூசி 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் Quebec மாகாணமும் AstraZeneca தடுப்பூசி பெறக்கூடியவர்களின் வயதெல்லையை குறைக்கவுள்ளது. ஆனாலும் இந்த வயது என்னவாக இருக்கும் என்பது குறித்த அறிவித்தல் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம்25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம்: NACI பரிந்துரை

Gaya Raja

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment