கனடிய பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் AstraZeneca தடுப்பூசிகளை பெற முடிவு செய்துள்ளனர்.
கனடாவில் நான்கு மாகாணங்களில் இன்று முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெறுவது அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். பிரதமர் Justin Trudeau, நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland ஆகியோர் தமது முதலாவது தடுப்பூசியை பெற முன் பதிவுகளை மேற்கொள்ளும் முயற்சியில் உள்ளனர்.
அதேபோல் எதிர் கட்சித் தலைவர்கள் தங்கள் தடுப்பூசிகளை பெற திட்டமிட்டுள்ளனர்