தேசியம்
செய்திகள்

முன்னறிவிப்பின்றி கனடா புதிய பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்: பிரதமர் எச்சரிக்கை

முன்னறிவிப்பின்றி கனடா புதிய COVID பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என கனடிய பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்) தெரிவித்தார்.

பிற நாடுகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட COVID பரவல் திரிபுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையை மேற்கோள் காட்டி பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டார். கனடா தனது பயண விதிககளை மிக விரைவாக மாறக்கூடும் என்பதால் கனடியர்களை பயணம் செய்ய வேண்டாம் என பிரதமர் கூறியுள்ளார். பயணங்களை முன்பதிவு செய்த எவரையும் அவற்றை இரத்து செய்ய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்திலும் பிரேசிலிலும் இருந்து பரவக்கூடிய தொற்றின் திரிபுகள் குறித்து மத்திய அரசு அவதானித்து வருவதாகவும், அதிகாரிகள் எந்த நேரத்திலும் முன்கூட்டிய அறிவிப்பு இல்லாமல் புதிய பயண கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் அவர் கூறினார். இதனால் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாவதுடன் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நிச்சயமற்ற தன்மையையும் ஏதிர்கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்தார். கனடியர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான உரிமை உண்டு என்பதை ஒப்புக் கொண்ட Trudeau, ஏனையவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் திறனும் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

Related posts

Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது: பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

மேலும் பயண இடையூறுகள் சாத்தியம்: Air Canada

Lankathas Pathmanathan

Leave a Comment