தேசியம்
செய்திகள்

தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு!

COVID தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு செய்துள்ளன.

அடுத்த மாதத்தில் கனடாவின் தடுப்பூசி விநியோகத்தை குறைப்பதற்கான Pfizerரின் அறிவித்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.Ontario, Manitoba மற்றும் Alberta ஆகிய மாகாணங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. கனடாவின் அடுத்த மாதத்திற்கான Pfizer தடுப்பூசி ஏற்றுமதி பாதியாகக் குறைக்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதனால் தனது தடுப்பூசி திட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை இந்த மூன்று மாகாணங்களுக்கும் தோன்றியுள்ளது. British Colombia மாகாணமும் விரைவில் இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான கனடியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அங்கீகரிக்கப்பட்ட Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளில் 822,000க்கும் மேற்பட்டவை இதுவரை மாகாணங்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Related posts

கனடா தலைமையிலான NATO பணிக்கு $273 மில்லியன் நிதி

Lankathas Pathmanathan

அடுத்த மாதம் இரண்டாவது தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் கனடா

Gaya Raja

இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் – கனேடிய முதற்குடியினர் தலைவர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment