தேசியம்
செய்திகள்

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் அமெரிக்கா பயணம்

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக ஆலோசகரை சந்திப்பதற்காக கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்.

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, தனது அமெரிக்க சகாவை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை (02) Washington  பயணம் செய்ய உள்ளார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer-ருடனான சந்திப்பில், அமைச்சருடன் தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் Janice Charette கலந்து கொள்வார் என Dominic LeBlanc செய்தித் தொடர்பாளர் கூறினார்.

CUSMA எனப் பரவலாக அறியப்படும் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டாய மறு ஆய்வுக்கு முன்னதாக, Ottawa, Washington இடையிலான அதிகாரப்பூர்வ வர்த்தக பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan சுங்க வரிகளை விமர்சித்ததை மேற்கோள் காட்டிய, Ontario அரசின் விளம்பரம் ஒன்றால் கோபமடைந்த ஜனாதிபதி Donald Trump, கடந்த ஆண்டு கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியிருந்தார்.

Related posts

March இறுதிக்குள் Ontario வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் Opioids காரணமாக நாளாந்தம் எட்டு மரணம்

Lankathas Pathmanathan

Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment