தேசியம்
செய்திகள்

Toronto தூதரக துப்பாக்கிச் சூட்டுடன் ஈரான் ஆதரவு பெற்ற தளபதி தொடர்பு?

Toronto தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, ஈரான் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் தளபதியுடன் அமெரிக்கா தொடர்பு படுத்துகிறது.

அமெரிக்காவில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஈரான் நாட்டவர் ஒருவருக்கும், Toronto நகரின் மையப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கடந்த March மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Toronto தாக்குதலுக்கும், கனடாவில் உள்ள ஒரு யூத வழிபாட்டுத் தலத்தை இலக்காகக் கொண்ட இரண்டாவது தாக்குதலுக்கும் பின்னணியில் Mohammad Baqer Saad Dawood Al-Saadi இருந்ததாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கனடிய அதிகாரிகளால் தேசியப் பாதுகாப்பு வழக்காகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம், RCMP-யின் தீவிர விசாரணைகளை தூண்டியது.

புதிதாக வெளியிடப்பட்ட அமெரிக்க குற்றவியல் புகார் ஒன்றின்படி, Mohammad Baqer Saad Dawood Al-Saadi ஐரோப்பா முழுவதும் குறைந்தது 18 பயங்கரவாத தாக்குதல்களையும், கனடாவில் நடந்த மேலும் இரண்டு தாக்குதல்களையும் “திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, பொறுப்பேற்றுக் கொண்டதாக” அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் புகாரில் குறிப்பாக, March 10, 2026 அன்று Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளை நிற Honda CR-V வானத்திலிருந்து இறங்கி, அமெரிக்கத் துணைத் தூதரக கட்டிடத்தை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்திருந்தது.

இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருத்தந்தையின் இறுதிச் சடங்கில் கனடாவின் ஆளுநர் நாயகம் பங்கேற்பு!

Lankathas Pathmanathan

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகும் : Health கனடா

Gaya Raja

Leave a Comment