தேசியம்
செய்திகள்

Ontario Liberal தலைமையில் Etobicoke சட்டமன்ற உறுப்பினர் ஆர்வம்?

Etobicoke தொகுதியின் Ontario Liberal கட்சி சட்டமன்ற உறுப்பினர் தலைமைப் பதவிக்கான போட்டியில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Ontario Liberal கட்சி சட்டமன்ற உறுப்பினர் Lee Fairclough கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் நுழைந்துள்ளார்.

தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது முடிவை வெள்ளிக்கிழமை (08) அவர் அறிவித்தார்.

கடந்த தேர்தலில் முதல் முறையாக மாகாண சட்டமன்ற உறுப்பினராக Lee Fairclough தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் Toronto-வில் உள்ள Etobicoke-Lakeshore  தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், Kitchener நகரில் உள்ள St. Mary’s பொது மருத்துவமனையில் முன்னாள் தலைவரான இவர் பதவி வகித்தார்.

தலைமை பதவி தேர்தலில் இரண்டு கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும், முன்னாள் துணை முதல்வரின் ஆதரவையும் Lee Fairclough பெற்றுள்ளார்.

Doug Ford முதல்வராக மூன்றாவது முறை எளிதான வெற்றி பெற்ற தேர்தலை தொடர்ந்து நடந்த தலைமை மதிப்பாய்வில் போதிய ஆதரவு கிடைக்காததால், முன்னாள் Liberal கட்சித் தலைவர் Bonnie Crombie இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பதவி விலகினார்.

இந்த நிலையில் அடுத்த Liberal கட்சித் தலைவர் எதிர்வரும் November மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

Lee Fairclough தவிர முன்னாள் அரசியல் ஊழியரான Dylan Marando மட்டுமே அதிகாரப்பூர்வமாக தலைமைப் பதவி போட்டியில் நுழைந்த வேட்பாளர் ஆவார்.

Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றார்.

Liberal கட்சி மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Rob Cerjanec, முன்னாள் மத்திய அமைச்சர் Navdeep Bains, Eric Lombardi ஆகியோரும் கட்சி தலைமை பதவியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related posts

Omicron பரவலுக்கு மத்தியில் Decemberரில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 3ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment