தேசியம்
செய்திகள்

Ontario முதல்வருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம்

Ontario முதல்வருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் வழங்கியது.
Ontario மாகாண முதல்வர் Doug Ford அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றிடமிருந்து கௌரவ முனைவர் பட்டத்தை சனிக்கிழமை (02) பெற்றார்.
Michigan மாநில Saginaw Valley மாநில பல்கலைக்கழகத்தில் மனிதாபிமானக் கடிதங்களுக்கான முனைவர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் தனது ஏற்புரையில் அமெரிக்காவுடனான கனடாவின் தற்போதைய வர்த்தக சவால்கள் குறித்து பேசினார்.
தான் பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்து, தனது குடும்பத்தின் அச்சு நிறுவனத்தை உருவாக்க உதவியதாக குறிப்பிட்ட Doug Ford, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான “200 ஆண்டுகளுக்கும் மேலான” உறவை பாராட்டினார்.
வாகன உற்பத்தித் துறையில் Ontario மாகாணத்திற்கும் Michigan மாநிலத்திற்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பை குறிப்பிட்ட அவர், அந்த உறவு வரிகளாலும் வர்த்தகப் போரினாலும் சவால்களை எதிர் கொள்வதாகும் தெரிவித்தார்.

Related posts

NDP தலைவர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

Atlantic கனடாவின் முதலாவது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் P.E.I. நபர்

Lankathas Pathmanathan

Leave a Comment