தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தின் அடித்தளம் பிரெஞ்சு மொழி: சட்டமன்ற ஆரம்ப உரையில் முதல்வர் Legault

43ஆவது Quebec சட்டமன்ற ஆரம்ப உரையை பொருளாதாரம், அடையாளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முதல்வர் François Legault வியாழக்கிழமை (30) ஆற்றினார்.

Coalition Avenir Québec கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சட்டமன்றத்தில் Legault தனது ஆரம்ப உரையை ஆற்றினார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் Montreal நகரில் பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியை மாற்றியமைப்பதும், Quebec கின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும் தனது பிரதான குறிக்கோள் என முதல்வர் தனது உரையில் கூறினார்.

Quebec மாகாணத்தின் அடித்தளம் பிரெஞ்சு மொழி என கூறிய அவர், Montreal நகரில் பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியை நிறுத்துவது தனது நோக்கம் எனவும் கூறினார்.

Related posts

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவர் நியமனம்!

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment