தேசியம்
செய்திகள்

சிறுவர்களுக்கு எதிரான குற்ற விசாரணையில் 107 பேர் மீது குற்றச்சாட்டு

Ontario மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விசாரணையில் 107 பேர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவாகின.

இணையத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த மாகாண ரீதியிலான விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச் சாட்டுகள் பதிவாகின.

Ontario மாகாண காவல்துறை, Toronto, Peel, Durham, Hamilton, Ottawa உள்ளிட்ட 27 காவல்துறை பங்காளிகளுடன் இணைந்து இந்த விசாரணையை முன்னெடுத்தது.

மாகாணம் முழுவதும், காவல்துறை சேவைகள் October மாதம் முழுவதும் மொத்தம் 277 விசாரணைகளை மேற்கொண்டன.

ஒரு மாத கால விசாரணை முயற்சியில் மொத்தம் 107 பேர் மீது 428 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Related posts

தொற்று காலத்தில் தேர்தல் வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் ஆதரவாக வாக்களித்தனர்

Gaya Raja

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 27, 2022 (வெள்ளி)

Lankathas Pathmanathan

மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment