தேசியம்
செய்திகள்

அமெரிக்க வரி விலக்கைப் பெறுவதற்காக கனடா ‘ஒரு சிறிய ஒப்பந்தத்தை நாடாது’: Mark Carney

அமெரிக்காவின் வரி விலக்கைப் பெறுவதற்காக கனடா ‘ஒரு சிறிய ஒப்பந்தத்தை நாடாது’ என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களில் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தாம் கருதும் பிற நாடுகளையும் Mark Carney சுட்டிக்காட்டுகின்றார்.

அமெரிக்கவுகாவுக்கு ஆற்றலும் விருப்பமும் இருந்தால், கனடாவும் அமெரிக்காவும் தற்போது நிலவிவரும் வரி சர்ச்சையை சில நாட்களுக்குள் தீர்த்துவிட முடியும் எனவும் Mark Carney கூறினார்.

பல கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கடுமையான இறக்குமதி வரிகளை விதித்து வருகிறது.

இதில் இரும்பு, அலுமினியம், செம்பு, சில வாகன உதிரிபாகங்கள், மரப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

சில வரிகளை நீக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் பணியாற்ற தயாராக உள்ளபோதிலும், ஒரு “சிறிய ஒப்பந்தத்தை” விரைவாக எட்டுவதில் தனக்கு ஆர்வம் இல்லை எனவும் Mark Carney மேலும் கூறினார்.

“சரியான நேரத்தில் ஒரு சிறந்த ஒப்பந்தம் எமக்குத் தேவை என்பதை குறிப்பிட்ட அவர், எமக்கு பாதகமான ஒரு சிறிய ஒப்பந்தத்தைத் துரத்துவது எமது தேவையில்லை என கூறினார்.

Related posts

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து குறித்து கனடிய பிரதமர் மகிழ்ச்சி?

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் ஏற்படும் மரணங்களை தடுக்க நடவடிக்கைகள்

Lankathas Pathmanathan

கனடியரின் கொலையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment