September 28, 2026
தேசியம்
செய்திகள்

கபவாதத்திற்காக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

கபவாதத்திற்காக (Pneumonia) அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கனடியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

கனடிய சுகாதார நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியானது.

கடந்த இலையுதிர்காலத்தில் கபவாதத்திற்கான அவசர சிகிச்சைப் பிரிவு வருகைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது என கனடிய சுகாதார நிறுவனத்தின் தகவல் தெரிவித்துள்ளது.

ஐந்து முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என வியாழக்கிழமை (11) வெளியிடப்பட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

COVID தொற்றுக்கு பின்னர் கபவாதத்திற்கான அவசர சிகிச்சைப் பிரிவு வருகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

2023-24 -ஆம் ஆண்டில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்வதற்கான முதல் 10 காரணங்கள் பட்டியலில் கபவாதம் இடம்பெறவில்லை.

ஆனால் 2024-25 ஆம் ஆண்டில் அது 3-ஆவது இடத்திற்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த மாதம் மட்டும் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புகள்!!

Gaya Raja

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

புதிய சபாநாயகராக Francis Scarpaleggia தெரிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment