தேசியம்
செய்திகள்

Ontario அரசாங்கம் கொள்வனவு செய்த தனியார் jet விமானத்தை மீண்டும் விற்பனை செய்ய முடிவு

Ontario மாகாண அரசாங்கம் கொள்வனவு செய்த தனியார் jet விமானத்தை மீண்டும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Ontario மாகாண அரசாங்கம் $28.9 மில்லியன் மதிப்பிலான தனியார் jet விமானம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது.

Ontario முதல்வர் Doug Ford அலுவலகம் இந்த கொள்வனவை உறுதி செய்தது.

Ontario முதல்வரின் பயணங்களுக்காக இந்த விமானம் கொள்வனவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்தக் கொள்வனவு குறித்து வெளியான கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து தனியார் jet விமானத்தை உடனடியாக விற்பனை செய்ய Doug Ford முடிவு செய்தார்.   .

எதிர்க்கட்சிகள், பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொண்டு அந்த Jet விமானத்தை விற்றுவிட தீர்மானித்தது.

இந்த கொள்வனவிற்கான சரியான நேரம் இதுவல்ல என்ற பொதுமக்கள் கருத்தை ஏற்றுக் கொள்வதாக திங்கட்கிழமை (20) தலைநகர் Ottawa-வில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் Doug Ford கூறினார்.

Related posts

 Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் நீக்கம்

Lankathas Pathmanathan

Ontarioவின் அடுத்த முதல்வராகும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Marit Stiles!

Lankathas Pathmanathan

பதவி விலகிய மற்றுமொரு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment