September 14, 2026
தேசியம்
செய்திகள்

Toronto அமெரிக்கத் துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு கண்டிக்கத்தக்க வன்முறைச் செயலாகும் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக Toronto நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டிக்கத்தக்க ஒரு மிரட்டல் முயற்சியான இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதில் நிம்மதியடைவதாக பிரதமர் Mark Carney கூறினார்

Toronto காவல்துறையின் விசாரணைக்கு உதவுவதற்கும், இந்த வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் RCMP உட்பட மத்திய பாதுகாப்பு பிரிவினர் தேவையான அனைத்து வளங்களையும் அர்ப்பணிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

‘இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என Conservative தலைவர் Pierre Poilievreகண்டித்தார்.

அனைத்து வகையான அரசியல் வன்முறையையும் கண்டிப்பதாக அவர் கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என Ontario மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

இதற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார்.

மிரட்டல் பாணியிலான இந்தத் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என Doug Ford கூறினார்.

இந்தத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்த Toronto நகர முதல்வர் Olivia Chow, இந்த விசாரணையின் ஒரு பகுதியாக Toronto காவல்துறையினர் RCMP உடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.

இதற்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து “அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில்” காவல்துறைக்கு தனது முழுமையான ஆதரவும் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், உள்ளூர் சட்ட அமுலாக்கத்துறையுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு “தேசிய பாதுகாப்பு சம்பவம்” என கருதப்படுவதாகவும், இதில் பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Toronto அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா?

Related posts

கனடிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிகமாக 500 பேரை வெளியேற்றியது!

Gaya Raja

உக்ரைன் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment