தேசியம்
செய்திகள்

Ontario அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருவர் கைது

Ontario மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

OSAP மானியங்களை குறைப்பதற்கு எதிராக Ontario மாணவர்கள் மாகாண சபையின் முன்பாக புதன்கிழமை (04) போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின் அளவு குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை வழங்க முடியாது என Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Queens Park வளாகத்தில் இருந்த சிலைகளில் ஒன்று போராட்டக்காரர்களினால் சிதைக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடத்திய இந்த ஆரவாரமான போராட்டத்தின் இறுதியில் இருவரைக் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களுக்கு எதிராக காவல்துறை அதிகாரியை தாக்கியது, காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்தது, சிலையை சேதப்படுத்தியது உள்ளியிட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

கைதாவனவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

கடந்த February மாதம் Doug Ford அரசாங்கம் OSAP மானியங்களில் அறிவித்த மாற்றங்களில் இருந்து இந்த போராட்டம் உருவானது.

அரசாங்கம் மாணவர்களின் உயர்நிலை கல்வி வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் இந்த மாற்றங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன.

Related posts

லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு தயாராகும் கனடிய அரசு!

Lankathas Pathmanathan

Quebec சுதந்திரத்திற்கான நிதி அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் PQ கட்சி!

Lankathas Pathmanathan

Ontarioவில் ஒரு மாதத்தில் முதல் முறையாக புதிய COVID மரணங்கள் பதிவாகவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment