தேசியம்
செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் அதிகம் தேடப்படும் குற்றவாளி கைது

கனடாவின் நாடு தழுவிய ரீதியில் அதிகம் தேடப்படும் குற்றவாளி Montreal நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bryan Fuentes Gramajo என்ற சந்தேக நபர் Toronto காவல்துறையினரால் நாடு தழுவிய ரீதியில் தேடப்பட்டு வந்தார்.

July 17, 2025 அன்று Yorkdale வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு கொலை தொடர்பாக இவர் தேடப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் October 2025-இல் கனடாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக பெயரிடப்பட்டார்.

25 சந்தேக நபர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தை பிடித்தார்.

24 வயதான Montreal நகரை சேர்ந்த இவர் வியாழக்கிழமை (05) அதிகாலை Montreal காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை

Related posts

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: மற்றொரு Liberal அமைச்சர் அறிவிப்பு

Lankathas Pathmanathan

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan

கனடாவின் மிகப்பெரிய உரிமை கோரப்படாத அதிஷ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment