தேசியம்
செய்திகள்

மத்திய கிழக்கிலிருந்து ஓமான் வான்வெளி ஊடாக கனடியர்களை வெளியேற்ற திட்டம்?

மத்திய கிழக்கிலிருந்து கனடிய குடிமக்கள் வெளியேறுவதற்கு ஓமான் வான்வெளியை உபயோகிப்பது குறித்து கனடிய அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.

மத்திய கிழக்கிலிருந்து கனடிய குடிமக்கள் வெளியேறுவதற்கு ஓமானிடம் அதன் வான்வெளியை பயன்படுத்த கனடிய அரசாங்கம் அனுமதி கோரியுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தக் கோரிக்கையை ஓமானிடம் முன்வைத்தார்.

97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனடியர்கள் மத்திய கிழக்கில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய கிழக்கிலிருந்து கனடிய குடிமக்கள் வெளியேறுவதற்கு தேவை ஏற்பட்டால், அதன் வான்வெளியை பயன்படுத்த ஓமானிடம் கோரியுள்ளதை கனடிய அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

இன்றைய நிலையில் கனடாவின் முன்னுரிமை பிராந்தியத்தில் உள்ள கனடியர்களின் பாதுகாப்பு என அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

ஆனால் கனடிய அரசாங்கத்திடம் கனடியர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இதுவரை இல்லை எனவும் அவர் கூறினார்.

கனடியர்கள் தங்கள் சொந்த வழிமுறைகளில் மத்திய கிழக்கிலிருந்து வெளியே வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

பாரசீக வளைகுடா, பரந்த மத்திய கிழக்கைச் சேர்ந்த பல வெளியுறவு அமைச்சர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாக கூறிய அமைச்சர் அனிதா ஆனந்த், அந்த நாடுகளில் கனடியர்களுக்கு ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வதாகவும் கூறினார்.

Related posts

Moroccoவின் விமானங்களை கனடா நிறுத்துகிறது!

Gaya Raja

72 அமெரிக்க சதத்திற்கு மேல் உயர்ந்தது கனடிய டொலர்!

Lankathas Pathmanathan

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment