September 27, 2026
தேசியம்
செய்திகள்

காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் கனடாவின் பங்கு?

காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தில் கனடா முக்கிய பங்காற்ற இணங்கியுள்ளதாக தெரியவருகிறது.

காசாவின் எதிர்கால மறு கட்டமைப்பை திட்டமிடுவதில் செயல்பட Board of Peace குழுவொன்றை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அமைக்கின்றார்.

இதில் இணைய கனடிய பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை Mark Carney ஏற்றுக் கொள்வார் என அரசாங்க வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

இந்த கோரிக்கை வெள்ளிக்கிழமை (16) முன்வைக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கனடிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இதை Mark Carney ஏற்றுக் கொள்வார் என உறுதிப்படுத்தினார்.

Donald Trump தலைவராக செயல்படும் இந்தக் குழு, இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான யுத்த நிறுத்தத்தையும், பிராந்தியத்தின் மறு கட்டமைப்பையும் மேற்பார்வையிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் கனடிய பிரதமருக்கான பங்கு குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

LJI Reporter ரம்யா சேது

Related posts

சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

முன்னாள் NDP தலைவர் Ed Broadbent மரணம்

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தீர்ப்பை அவதானிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment