September 30, 2026
தேசியம்
செய்திகள்

வெளியாகிறது அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பு!

கனடாவை தலைமையகமாக கொண்ட  அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பு (Constitution) இந்த மாதம் வெளியாகிறது.

January 24-ஆம் திகதி இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழாவில் இந்த யாப்பு முறையாக வெளியாகிறது.

இந்த யாப்பு ஒரு ஆவணம் மட்டுமல்ல என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

உலகத் தமிழர்களின் ஒற்றுமையின் உறுதியாகவும், நீதி, ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகிய மதிப்புகளின் எழுத்துப்பூர்வ உறுதி மொழியாகவும் இந்த யாப்பு அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உழைப்பினால் தேசத்தை வலுப்படுத்துவதே பொங்கல் பண்பாட்டின் நோக்கம் என தனது பொங்கல் செய்தியில்  நிமால் விநாயகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவரின்
பொங்கல் செய்தி ….

LJI Reporter ரம்யா சேது

Related posts

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணையில் 59 சந்தேக நபர்கள் கைது – 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment