தேசியம்
செய்திகள்

மீண்டும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு?

Alberta மாகாணத்துடனான கனடிய மத்திய அரசின் ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பை கட்டாயப்படுத்த Conservative கட்சி முடிவெடுத்துள்ளது.

இது குறித்த எதிர்க்கட்சி பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க Conservative கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த எதிர்க்கட்சி பிரேரணை செய்வாய்க்கிழமை  (09) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

இதன் மூலம் Alberta மாகாணத்துடனான Liberal அரசாங்கத்தின் ஒப்பந்தம் சபையின் மைய விவாதமாக அமையும் நிலை தோன்றியுள்ளது.

Liberal கட்சி தாங்கள் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வாக்குறுதியளித்தவைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

இந்த ஒப்பந்தத்தால் Mark Carney அரசாங்கம் ஏற்கனவே அரசியல் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த ஒப்பந்தத்தால் அமைச்சரவையில் இருந்து Steven Guilbeault பதவி விலகினார்.

அரசாங்கத்தின் இரண்டு காலநிலை ஆலோசகர்களும் பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

திருடப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் வாகன விற்பனை முகவர்கள் இருவர் கைது

Lankathas Pathmanathan

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan

தமிழ் இளைஞர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment