தேசியம்
செய்திகள்

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கனடா

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்தது.

கனடிய மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் திங்கட்கிழமை (08) வெளியானது.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Lena Metlege Diab ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய “express entry” பிரிவை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

கனடாவில் சுகாதாரப் பணியாளர்களின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருட கனடிய பணி அனுபவத்தைப் பெற்ற சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை இந்தப் புதிய நடவடிக்கைகள் குறிவைக்கின்றன.

LJI Reporter ரம்யா சேது

Related posts

குவைத்தில் உள்ள கனடிய விமானப்படை தளத்தின் மீது ஈரானிய ஏவுகணை தாக்குதல்?

Lankathas Pathmanathan

COVID தொற்றுக்கு முந்தைய விதிகளுக்கு நாடு திரும்ப வேண்டும்: Conservative

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 7 மின் மாற்றிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment