தேசியம்
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் இந்த வாரம் மாற்றம்?

கனடிய மத்திய வங்கி இந்த வாரம் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என எதிர்வு கூறப்படுகிறது.

மத்திய வங்கி இந்த வாரம் தனது அடுத்த வட்டி விகிதங்கள் குறித்த முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை  (10)  வெளியாகும் இந்த அறிவித்தல், இந்த ஆண்டின் இறுதி வட்டி விகித அறிவித்தலாகும்.

இந்த நிலையில் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை கனடிய மத்திய  வங்கி நான்கு வட்டி விகிதக் குறைப்புகளை அறிவித்துள்ளது.

September, October மாதங்களில் வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவை மத்திய வங்கி அறிவித்தது.

இதற்கு முன்னர், அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் காரணமான நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை மூன்று தொடர்ச்சியான தடவைகளுக்கு 2.75 சதவீதமாக வைத்திருந்தது.

மத்திய வங்கி வருடத்திற்கு எட்டு முறை கூடி பணவியல் கொள்கை குறித்து விவாதிப்பதுடன், முக்கிய வட்டி விகித அறிவித்தலையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடாவின் புதிய பிரதமர் – மன்னர் சார்லஸ் விரைவில் சந்திப்பு

Lankathas Pathmanathan

Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?

Lankathas Pathmanathan

பொது விசாரணை அழைப்பை நிராகரிப்பதில் இணையும் எதிர்கட்சிகள்

Leave a Comment