தேசியம்
செய்திகள்

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் Opioids காரணமாக நாளாந்தம் எட்டு மரணம்

 COVID தொற்றின் முதலாம் ஆண்டை விட இரண்டாம் ஆண்டில் Ontarioவில் அதிகமானவர்கள் Opioids காரணமாக மரணமடைந்துள்ளனர்.

தொற்றின் இரண்டாம் ஆண்டில் Opioids காரணமாக நாளாந்தம் சுமார் எட்டு பேர் மரணமடைந்தனர்.

Ontarioவின் தலைமை மரண விசாரணை அதிகாரியின் ஆரம்ப தரவுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியது.

April  2021 முதல் March2022 வரை, 2,790 opioid தொடர்பான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை தொற்றின் முதல் ஆண்டில் 2,727ஆக இருந்தது.

Opioids காரணமாக 2019ஆம் ஆண்டில் 1,559 பேர் Ontarioவில் மரணமடைந்தனர்.

வடக்கு Ontario கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக தொடர்ந்தும் உள்ளது.

இப்பகுதி முழு மாகாணத்தின் இறப்பு விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

Related posts

Conservative இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவேன்: இடைக்கால தலைவர் Bergen

Lankathas Pathmanathan

Paris Olympics: இரண்டாவது பதக்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!

Lankathas Pathmanathan

Leave a Comment