September 28, 2026
தேசியம்
செய்திகள்

Trillium அறக்கட்டளைக்கு Sugshe குழும நிறுவனங்களின் கீழியங்கும் சரவணபவன் உணவகம் $100,000 நன்கொடை

சரவணபவன் உணவகம் Trillium அறக்கட்டளைக்கு $100,000 நன்கொடை வழங்கியுள்ளது.

Sugshe குழும நிறுவனங்களின் கீழ் இயங்கும் சரவணபவன் உணவகம் இந்த நன்கொடையை  வழங்கியுள்ளது.

அந்த நிதி எமது சமூகத்திற்குள் சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான உன்னத நோக்கத்தை ஆதரிக்கும் வகையில் Trillium Health Partners அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்களிப்பை Trillium அறக்கட்டளையின் சார்பாக மூத்த துணைத் தலைவர் Nicole Lamont பெற்றுக்கொண்டார்.

எனது ஆதரவளித்த சமூகத்திற்கு மீண்டும் வழங்கும் எனது வாழ்நாள் உறுதிப்பாட்டின் மற்றொரு முக்கியமான மைல்கல்லை இந்த முயற்சி குறிக்கிறது என Sugshe குழும நிறுவனங்களின் தலைவர் கணேசன் சுகுமார் தெரிவித்தார்.

முன்னதாக Scarborough சுகாதார வலையமைப்புக்கு Sugshe குழுமம் $500,000 நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகள் கபடத்தனமானவை: கனேடியத் தமிழர் கூட்டு கண்டனம்

Lankathas Pathmanathan

18 ஆயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவித்தல்

Lankathas Pathmanathan

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் ஆறு பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment