தேசியம்
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை தனது கட்சி ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை: Bloc Quebecois தலைவர்

Liberal அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தனது கட்சி ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என Bloc Quebecois தலைவர் Yves-François Blanchet தெரிவித்தார்.

மத்திய அரசின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஐந்து வாரங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.

November 4-ஆம் திகதி புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் Francois-Philippe Champagne அறிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து Liberal அரசாங்கம் தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது Yves-François Blanchet கூறினார்.

அரசாங்கம் சில தனிப்பட்ட வரவு செலவு திட்ட ஆலோசனைகளை நடத்தினாலும், இதன் உள்ளடக்கங்கள் பிரதமர் அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு ஆலோசனைகளும் இல்லாத வரவு செலவுத் திட்டம், எந்த வகையிலும் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யாது எனவும்ய Yves-François Blanchet கூறினார்.

இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை தனது கட்சி ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என Bloc Quebecois தலைவர் தெரிவித்தார்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம், பிரதமர்  Mark Carney அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டமாகும்.

நிதியமைச்சராக Francois-Philippe Champagne சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டமும் இதுவாகும்.

பொதுவாக இலைதுளிர் காலத்தில் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தை  Liberal அரசாங்கம் இம்முறை இலையுதிர் காலம் வரை தாமதப்படுத்தியது.

இந்த வரவு செலவுத் திட்டம் மத்திய அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற, சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் ஒரு கட்சியின் ஆதரவு அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா – Mexico இடையே மூலோபாய கூட்டு ஒப்பந்தம்?

Lankathas Pathmanathan

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan

January மாதம் சில்லறை விற்பனையில் வீழ்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment