September 30, 2026
தேசியம்
செய்திகள்

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நாட்டின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என கூறிய Mark Carney, இது பிராந்தியத்தில் மோதல்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்.

இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என தெரியவருகிறது.

காசாவில் போர் நிறுத்தத்தை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை கத்தார் முன்னெடுக்கும் நிலையில் இந்த தாக்குதலை Mark Carney கண்டித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், மத்திய கிழக்கில் “சமாதானத்தை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை” இது ஆபத்தில் ஆழ்த்துகிறது என அவர் தெரிவித்தார்.

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த கத்தாரின் முயற்சிகளுக்கு கனடா ஆதரவளித்துள்ளது.

Related posts

Torontoவில் இந்த பருவத்தின் முதலாவது பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Alberta முதல்வர் – Donald Trump சந்திப்பு

Lankathas Pathmanathan

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment