தேசியம்
செய்திகள்

அமெரிக்கா பயணமாகும் அமைச்சர் Dominic LeBlanc!

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, இந்த வாரம் அமெரிக்க தலைநகரில் அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Howard Lutnick-ஐ சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்புக்காக Dominic LeBlanc செவ்வாய்க்கிழமை (26) அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த வர்த்தகப் போருக்கு மத்தியில், அமெரிக்க பொருட்கள் மீதான வரிகள் சிலவற்றை கனடா கைவிடுவதாக பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை அறிவித்த சில நாட்களின் பின்னர் இந்த சந்திப்பு குறித்த செய்தி வெளியானது .

புதிய பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சமீபத்திய மாதங்களில் Dominic LeBlanc அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பல பயணங்களில் இந்தப் பயணமும் அடங்குகிறது.

August 1-ஆம் திகதிக்குள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான காலக் கெடு முடிவடைந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அதிபர் Donald Trump  சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத கனடியப் பொருட்களுக்கான வரிகளை 35 சதவீதமாக அதிகரித்தார்.

இதற்கிடையில், கனடா பல மாதங்களாக அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரிகளை விதித்து வருகிறது.

கடந்த வாரம், கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் முக்கிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவையின் மெய்நிகர் கூட்டத்தின் பின்னர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ளடங்கும் அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை கைவிடுவதாக Mark Carney அறிவித்தார்.

Related posts

கனடாவில் COVID மரணங்கள் 34 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகல் – புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பு: Justin Trudeau

Lankathas Pathmanathan

Alberta ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment